ஒர்கவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட அதுல்யா ரவி – திக்குமுக்காடிய ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் அதுல்யா ரவி. முதல் படத்திலேயே டாப் ஹிட் கொடுத்த நடிகையாகவும் மக்கள் மனதில் நிலைத்துள்ளார். இந்நிலையில் அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து வரும் அதுல்யா ஒர்க்அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதுல்யா ரவி

2017 இல் வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. முதல் படமே இவருக்கு செம ஹிட் கொடுத்தது. இவரது நடிப்பு மக்களுக்கு பிடித்து போனது என்றே சொல்லலாம். மேலும் இது முழுக்க முழுக்க காதல் கதை என்பதால் இளைஞர்கள் மனதையும் கொள்ளை கொண்டார் அதுல்யா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரின் அழகே அந்த கண்கள் தான் என ஒரு காலத்தில் அதுல்யா பின் சுற்றியும் திரிந்தனர். இப்படி ஒரே பாடலில் பெரிய ஆளாக மாறுவதை போல ஒரே படத்தில் பெரிய ஆளாக ஆனார் அதுல்யா. அடுத்தடுத்து இவர் நிறைய படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் வழக்கம் போல அனைவரும் சொதப்பும் விதமாக தப்பான கதையையே தேர்ந்தெடுத்தார்.

அடுத்தடுத்த படங்கள் பிளாப்பிலேயே முடிந்தது. இதற்கு அடுத்த கட்டமாக தான் அவர் படங்களுக்கு ஏற்றவாறு கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். அதுல்யாவா இது? என ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்தாலும் நாளடைவில் அதுவும் ரசிகர்களுக்கு பிடித்தும் போனது. அதன் பிறகு ஏமாளி, நாடோடிகள் 2 போன்ற படங்களில் நடித்திருந்தார்.

‘டுபாக்கூர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய டுபாக்கூர் சனம்’ – மீரா மிதுன் ட்விட்டால் கடுப்பான ரசிகர்கள்!!

நாடோடிகள் 2 அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பை உருவாக்கியது. ஒரு கல்லூரி பெண்ணாக தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருப்பார். அதன் பிறகும் அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவரும் சில காலமாக போட்டோஷூட் நடத்தி வந்தார். அந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

அதுவும் லாக்டவுன் சமயத்தில் பல விடீயோக்கள், புகைப்படங்கள் என தொடர்ந்து வெளியிட்டு வந்தார். தற்போது தமிழில் அவர் புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அதனால் உடலை குறைப்பதற்காக ஒர்க்அவுட் செய்து வருகிறார். அந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். பலரும் அதனை பார்த்து ஜொள்ளுவிட்டும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here