காங்கிரசில் இருந்து விலகி பாஜக.,வில் இணைந்த நடிகை விஜயசாந்தி – கட்சியினர் அதிர்ச்சி!!

0

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முக்கிய கதாநாயகர்களுடனும், ஆக்ஷன் படங்களில் கதாநாயகர்களை விட சிறப்பாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை விஜயசாந்தி. அவர் தற்போது பா.ஜ.க. வில் இணைந்து உள்ளார்.

1998ம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் தற்போது பா.ஜ.க வில் இணைந்துள்ளார். அக்கட்சியில் அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. பின்னர் பா.ஜ.க வில் இருந்து விலகி “தல்லி தெலுங்கானா” என்ற கட்சியை ஆரம்பித்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இக்கட்சிக்கு மக்களிடையே ஆதரவு இல்லாததால் அதை களைத்து விட்டு 2009 ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார். அக்கட்சியின் மக்களவை எம்.பி யாக வலம் வந்தார். அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் விற்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தததால் அக்கட்சியில் இருந்து 2011ம் ஆண்டு விலகினார்.

11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்!!

2014ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த இவருக்கு அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்த்து கிடைத்தது. இந்நிலையில் நேற்று அக்கட்ச்சியில் இருந்து அதிகாரப்ப்ப்பூர்வமாக விலகினார். மேலும் பா.ஜ.க வின் முக்கிய தலைவர்களை சந்தித்த அவர் டெல்லி சென்று இன்று அக்கட்சியில் சேர்ந்தார். 2023 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இவரின் வருகை கூடுதல் பலமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here