பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது இந்த கொரோனா வைரஸ் – உலக சுகாதாரத்துறை அமைப்பு

0

தற்போது கொரோனா நாடெங்கிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் பலி எண்ணிக்கையும் குறைந்த பாடில்லை. இந்நிலையில் 2009 இல் தோன்றிய பன்றி காய்ச்சலை விட இந்த கொரோனா 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார்.

பன்றிக்காய்ச்சல்

Swine Flu Course | Causes, Effects and Treatment | Alison

2009 இல் மார்ச் மாதம் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் முதன்முதலில் ‛பன்றிக்காய்ச்சல் (எச் 1 என் 1) நோய்த்தொற்று கண்டறிப்பட்டது. இதில் 18,500 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால், லான்செட் மருத்துவம், ஆப்ரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் நிகழ்ந்த இறப்புகளை உலக சுகாதார அமைப்பு மதிப்பிடவில்லை எனவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 1,51,700 முதல் 5,75,400 வரை இருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தது.

உலக சுகாதார அமைப்பு

இதை தொடர்ந்து தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு சில தகவல்களை கூறியுள்ளது. இதை பற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியதாவது “கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை நாங்கள் அறிவோம். இது 2009ல் பரவிய பன்றிக் காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது. கொரோனா மிகவும் மெதுவாக குறைகிறது. அதாவது, கீழே செல்வதை விட மேலே செல்வது அதிகமாகி வருகிறது.

How to Reform the Ailing World Health Organization | Council on ...

சரியான பொது சுகாதார நடவடிக்கைகள் இருந்தால் மட்டுமே தொடர்பு நடவடிக்கைகளை அகற்ற முடியும். இதில் தொடர்பு கண்டுபிடிப்பதற்கான குறிப்பிடத்தக்க திறன் உள்ளது. பரவுதலை முழுமையாக நிறுத்த, ஒரு தடுப்பூசி அவசியம். ஆனால், அதற்கு 12 முதல் 18 மாதங்கள் ஆகலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here