Sunday, May 5, 2024

2011 உலக கோப்பை “மேட்ச் பிக்சிங்” – 9 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்துள்ள சர்ச்சை..!

Must Read

எந்த ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாத உலக கோப்பை தொடர் என்றால் அது 2011 ஆம் ஆண்டு நடந்த போட்டி. ஆனால் 9 வருடங்கள் கழித்து இந்த போட்டி ஒரு மேட்ச் பிக்சிங் போட்டி என்று கூறி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை:

2011 ஆம் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி இலங்கையுடன் பைனல் மேட்சில் மோதியது. அந்த மேட்சை யாராலும் மறக்க முடியாது. ஏன் என்றால், தோற்று விடுவோம் என்று நம்பப்பட்ட அந்த போட்டியில் தோனி சிக்ஸர் அடித்து மேட்சை முடித்து வைத்து வெற்றி வாகை சூடியிருப்போம்.

dhoni
dhoni

தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த ஆட்டம் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது, இலங்கையில்.

என்ன புகார்?

நம் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய இந்த ஆட்டம் மேட்ச் பிக்சிங் செய்யப்பட்டு விளையாட பட்டு உள்ளது என்று புகார் எழுந்து உள்ளது. முதலாவதாக இறுதிப்போட்டியில் சூதாட்டம் நடந்ததாக முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா புகார் தெரிவித்திருந்தார்.

mahindananda
mahindananda

இந்த நிலையில் அப்போதைய இலங்கை அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்தா அலுத்கமகே ” இந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்து உள்ளது. அந்தப் போட்டியில் நாம் விலை போய்விட்டோம். பைனலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். இதுகுறித்து யாரிடம் வேண்டுமென்றாலும் என்னால் வாதிட முடியும். இந்தச் சூதாட்டத்தில் வீரர்களுக்குத் தொடர்பு கிடையாது. வேறு சிலர் இதில் ஈடுபட்டு உள்ளனர் என்பது எனக்கு தெரியும்” என்று கூறியுள்ளார். அமைச்சர் இப்படி கூறி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வீரர்கள் கருத்து:

இந்தக் கருத்தை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்கள் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். அப்போது கேப்டனாக இருந்த சங்ககாரா கூறுகையில் “குற்றச்சாட்டு சொல்கிறார் என்றால் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். அந்த ஆதாரங்களை அவர் ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட தடுப்புத்துறை இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.

sangakkara
sangakkara

இறுதிப்போட்டியில் சதம் அடித்த ஜெயவர்தனேவும் இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். அவர் கூறுகையில் “போட்டியில் ஆடிய 11 பேர் சம்பந்தப்படாமல், மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாக எப்படிச் சொல்ல முடியும்.. அது சாத்தியமா? 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அறிவொளி பிறக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

jayawardene
jayawardene

இந்த புது குழப்பத்தால் இப்போதைய விளையாட்டு துறை அமைச்சர் டல்லஸ் அலாஹப்பெருமா ” இது தோற்றப்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை விசாரணை குறித்த அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு உள்ளார்.

போட்டி நடந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சை எழுந்து உள்ளது ஆச்சிரியம் அளிப்பதாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -