34 பயணிகள் ரயில் எக்ஸ்பிரசாக மாற்றம் – இந்தியன் ரயில்வே அறிவிப்பு..!

0
indianrailways
indianrailways

தமிழகத்தில் திருச்செந்தூர் – பாலக்காடு, நாகர்கோவில் – கோவை ரயில்கள் உள்பட 34 பயணிகள் ரயில்களை விரைவு ரயில்களாக மற்ற நடவடிகிய எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே வாரியம் நாடு முழுவதும் உள்ள 17 ரயில்வே மண்டலத்துக்கு 17 தேதியில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 200 கிலோமீட்டருக்கு மேல் இயக்கப்படும் 508 பயணிகள் ரயில்கள் நிறுத்தங்கள் குறைக்கப்பட்டு அவை விரைவு ரயில்களாக மாற்ற உத்தரவிட பட்டிருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

express train
express train

அந்த வகையில் திருச்சி-ராமேசுவரம், விழுப்புரம்-திருப்பதி, புதுச்சேரி-திருப்பதி, விழுப்புரம்-மதுரை, திருச்சி-பாலக்காடு, நெல்லை-ஈரோடு, திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-புனலூர், நாகர்கோவில்-கோவை போன்ற 34 பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்ற பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயில்கள்

மேலும் பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்படும் போது பயண நேரம் வெகுவாக குறையும். அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் நின்று செல்வது என்பது சாத்தியமற்றது.

சீன பொருட்கள் புறக்கணிப்பை அரசு ஆதரிக்க கூடாது – தேவகவுடா அறிக்கை..!

passangers
passangers

இதனை அடுத்து பயணிகள் ரயிலை நம்பி அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருபவர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகலாம். மேலும் இதனால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்றும் ஏற்கனவே இயங்கும் ரயிலின் சேவைகள் மாற்றப்படும் என்றும் த்தகவல் வெளியாகியுள்ளது.