சீன பொருட்கள் புறக்கணிப்பை அரசு ஆதரிக்க கூடாது – தேவகவுடா அறிக்கை..!

0
deve-gowda
deve-gowda

இந்தியா, சீனா இடையே நடந்த லடாக் எல்லை பிரச்சனையில் சீனா பொருட்களை புறக்கணிக்க மக்கள் குரலெழுப்பி வருவதை மத்திய அரசு ஆதரிக்க கூடாது. என முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா கட்சி தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார்.

லடாக் எல்லை பிரச்சனை

இந்தியா-சீனா இடையே கடந்த 1 மாதத்திற்கு மேலாக எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. இதனை அடுத்து பல பேச்சு வார்த்தைகள் நடத்தியும் அதனால் எந்த பயனும் இல்லை. தற்போது ஜூன் 15 இல் சீனா- இந்தியா இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் இந்தியாவை சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

india china ladakh problem
india china ladakh problem

சீனாவிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த பிரச்னையை தொடர்ந்து தற்போது இந்தியாவில் சீனா பொருட்களை புறக்கணிக்க மக்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

தேவகவுடா

இந்நிலையில் மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த ரிகையில் அவர் கூறியதாவது, லடாக் பிரச்னையை தொடர்ந்து மோடி அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியதை நான் வரவேற்கிறேன். எதிர்கட்சிகள் கட்டுப்பாடற்ற முறையில் பேசி விட கூடாது. உள்நாட்டு அரசியலையும், தேச பாதுகாப்பை ஒரே தட்டில் வைத்து பார்க்க கூடாது. சீனா பொருட்களை புறக்கணிப்போம் என்ற மக்கள் குரலுக்கு செவிசாய்க்க கூடாது. யதார்த்த வழியில் நாம் நடக்க வேண்டியது அவசியம். கோவம், ஆத்திரம், பழிவாங்குதல் போன்ற உணர்வுக்கு இது சரியான நேரம் அல்ல.

கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!

deve-gowda
deve-gowda

மேலும் லடாக் சம்பவத்தில் சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறாக சில விஷயங்கள் பரவுவது வேதனை அளிக்கிறது. மேலும் இதனை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். எல்லையில் இந்தியா வீரர்கள் எவ்வாறு வேற மரணம் அடைந்தார்கள் என்பதை விசாரித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here