ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத ஒதுக்கீடு – நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவாதம்..!

0
Exams
Exams

மருத்துவ படிப்புகளுக்கு உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுபடி 27 % இட ஒதுக்கீடு ஓபிசி பிரிவினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க படும் என்று மத்திய அரசு உத்தரவாதம் அளித்து உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்குக்கான இட ஒதுக்கீடு :

medical exams
medical exams

இந்திய எங்கிலும் நடத்தப்படும் நீட் தேர்வின் மூலம் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படும் ஓபிசி பிரிவினருக்கு 50 % இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் ஆன அதிமுக, திமுக, பாமக, திராவிடர் கழகம், மதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்து இருந்தது.

பதில்மனு:

பதில்மனு மத்திய சுகாதார சேவைகள் இயக்குநரக உதவி தலைமை இயக்குநர் ஸ்ரீனிவாஸ் சார்பில் தரப்பட்டது. அவர் கூறுகையில் “மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி ஓபிசி பிரிவினருக்கு 27 % இட ஒதுக்கீடு வழங்க படும். இதனை நங்கள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளோம். மேலும், அந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிட பட வேண்டிய ஒன்று. குறிப்பிட்ட அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் மனுதாரர்கள் தங்களை அந்த வழக்கில் இணைத்து கொள்ள வேண்டும்” என்று கேட்டு கொண்டு உள்ளார்.

ஐஐடி நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா? தமிழக அரசு விளக்கம்!!

இதுகுறித்து தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறுகையில்”மத்திய அரசு 27 % இட ஒதுக்கீடு அளித்து இருப்பது முதல் கட்ட வெற்றி. 50 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கு திமுக தொடர்ந்து போராடும்” என்று கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here