தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதை தொடர்ந்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விளக்கம் அளித்து உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் இரு மடங்காக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 2வது இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் உயிரிழப்புகள் விகிதம் மிக குறைவாகவே உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த முடிவும் இதுவரை செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

corona lockdown
corona lockdown

மேலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்கள் மூலம் தான் கொரோனா பரவுகிறது. சென்னை மக்கள் வெளியூர் செல்லாமல் இங்கேயே இருந்தால் தான் பரிசோதனை மேற்கொள்ள முடியும் என முதல்வர் தெரிவித்தார். சென்னையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது குறித்து மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார். மேலும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா இல்லை என அவரே கூறி விட்டதாக முதல்வர் கூறியுள்ளார்.

ஐஐடி நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கு இ-பாஸ் தேவையா? தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் எப்போது கொரோனா பாதிப்பு ஒழியும் என்கிற கேள்விக்கு ‘அது கடவுளுக்குத் தான் தெரியும்’ என முதல்வர் பதிலளித்து உள்ளார். சென்னையில் ஒரே நாளில் 527 காய்ச்சல் முகாம்களில் 900 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதாக முதல்வர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here