“கும்கி” அஸ்வின் ராஜாவின் 4 வருட காதல் – வரும் 24 ஆம் தேதி “டும் டும் “..!

0

காமெடி நடிகர் ‘கும்கி’ அஸ்வின் ராஜாவுக்கு வரும் ஜூன் 24 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்க பட்டு உள்ளது. இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் பெற்றோர்கள் சம்மதத்துடன் எளிமையாக நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

‘கும்கி’ அஸ்வின் ராஜா:

அகத்தியனின் கோகுலத்தில் சீதை, சுந்தர்.சியின், உள்ளம் கொள்ளை போகுதே, செல்வராகவனின் புதுப்பேட்டை, கமல்ஹாசனின் அன்பே சிவம் உட்பட பல படங்களை தயாரித்த நிறுவனம், லட்சுமி மூவி மேக்கர்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் வி.சுவாமிநாதன். இவர் மகன் அஸ்வின் ராஜா.

ashwin raja
ashwin raja

இவர் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை முடித்து உள்ளார். இவர் ஆர்யா, நயன்தாரா நடித்த இயக்குனர் ராஜேஷ் இயக்கிய “பாஸ் என்கிற பாஸ்கரன்” என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து, எத்தன், வந்தான் வென்றான், முப்பொழுதும் உன் கற்பனைகள் உட்பட பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்தார்.

“கும்கி”:

இதனை தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான “கும்கி” படத்தில் தம்பி ராமைய்யா வுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இந்த படத்தில் அவரது வேடம் அதிகமாக பேசப்பட்டதால் தனது பெயரை “கும்கி” அஸ்வின் என்று மாற்றி கொண்டார். தொடர்ந்து, நெடுஞ்சாலை, சண்டிவீரன், ஜாக்பாட், கணிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணம்:

இவர் கடந்த 4 ஆண்டுகளாக வித்யாஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்து உள்ளார். வித்யாஸ்ரீ சென்னையில் வசித்து வருகிறார். இவர்கள் காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது.

வேலைவாய்ப்பு முகாம் 2020 – ‘கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ திட்டத்தை மோடி துவங்கி வைத்தார்..!

கொரோனா கட்டுப்பாடுகளால் திருமணம் எளிமையாக சூளைமேட்டில் உள்ள அஸ்வின் வீட்டில் நடக்க இருக்கிறது. நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here