வேலைவாய்ப்பு முகாம் 2020 – ‘கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான்’ திட்டத்தை மோடி துவங்கி வைத்தார்..!

0
PM Modi
PM Modi

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக இன்று துவங்கி வைத்தார்.

வேலைவாய்ப்பு முகாம்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய அரசு சார்பில் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என பெயரிடப்பட்டது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் (100 நாள் வேலைத்திட்டம்) போன்றவை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

PM Modi
PM Modi

“வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா” – நாளை சர்வேதேச யோகா தினம்..!

இன்று பிரதமர் மோடி அவர்கள் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டத்தை காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். 125 நாட்கள் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் புலம்பெயர் தொழிலாளர்கள் 25 வகையான வேலைவாய்ப்புகளை பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 50 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here