“வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா” – நாளை சர்வேதேச யோகா தினம்..!

0

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி உலக யோகா தினம் ஆக கொண்டாட ஐ.நா சபை உலக நாடுகள் அனைத்தையும் அறிவுறுத்தியது. அதன் படி நாளை சர்வதேச யோகா தினத்தில் உடலை பேணி பாதுகாக்க யோகாசனம் செய்ய வேண்டும்.

சர்வதேச யோகா தினம்:

yoga day
yoga day

கடந்த 2014 ஆம் ஆண்டு நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா சபைக்கு ஜூன் 21 ஆம் தேதியை சர்வதேச யோகா தினம் ஆக கொண்டாட வலியுறுத்தினர். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் 21 ஆம் தேதியை சர்வேதேச யோகா தினம் ஆக அறிவித்தது ஐ.நா. சபை. அதன்படி இந்த ஆண்டும் யோகா தினம் சிறப்பாக கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டது.

modi
modi

ஆனால் இந்த கொரோனா பாதிப்பால் அனைவரும் வீட்டில் இருந்தபடியே கொண்டாட கேட்டு கொள்ள பட்டு உள்ளது. இந்த வருடத்திற்கான தீம் எனப்படும் கருப்பொருள் ““கர் கர் மே யோக்” அல்லது “வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா” என்று கூறப்பட்டு உள்ளது. இந்த தினத்திற்காக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னால் போட்டிகளை கூட அறிவித்து இருந்தது.

யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள்:

யோகா எனப்படுவது மதம், இனம், மொழி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அது நமது உடலை மேன்படுத்த உதவ கூடிய ஒன்று. உடலை மட்டும் அல்லாமல் நம் மனதையும் வளப்படுத்த உதவுகிறது. இப்பொது நாம் வாழும் இந்த அவசர உலகில் நமது மனம் மிகுந்த அலைபாய்தலுக்குஉள்ளாகிறது.

yoga day
yoga day

அதனை கட்டு படுத்த தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் ஆவது யோகாசனம் செய்ய வேண்டும். இதனை தான் நம் முன்னோர்கள் செய்து வலிமையான வாழ்கை வாழ்ந்து வந்தனர். நமது யோசிக்கும் திறனையும், சமநிலை மனதையும் அது தருகிறது.

கொரோனாவிற்கு தடுப்பூசி வந்தாச்சு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு..!

யோகா வலிநிவாரணியாகவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், இதய நோய்களை விரட்டி அடிக்க வல்லது. இளமையில் இருந்து யோகா செய்து வந்தால் முதுமை காலத்தில் நாம் உடல் வலி, கழுத்து வலி, முட்டு வலி, போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். அமைதியும் ஆனந்தமும் அதிகரிக்க செய்யும் யோகாவை தினம் செய்து நாமும் பலன் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here