Sunday, April 28, 2024

வீட்டில் இருந்து வேலை செய்வதால் இவ்ளோ மிச்சமா?? – ஆய்வில் தகவல்!!

Must Read

பொது முடக்கத்தால் வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் பல மணி நேரத்தையும் சில ஆயிரங்களை சேமிப்பதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது முடக்க காலம்:

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அமலில் இருக்கும் பொது முடக்கத்தால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியது. ஒரு புதுவித அனுபவத்தை தந்ததாகவும், பல சவால்களை சந்தித்தாகவும் பலர் ஆய்வில் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த ஆய்வு இந்தியாவில் உள்ள 7 பெரிய மெட்ரோ நகரங்களில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்டது. 1000 பேர் கொண்ட இந்த ஆய்வு, வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்களின் மனநிலையை பறைசாற்றியுள்ளது.

பல நன்மைகள்:

இந்த ஆய்வின் முடிவில் 74 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் இப்படி வீட்டில் இருந்து வேலை செய்வதன் மூலமாக தங்களுக்கு கூடுதலாக 2 மணி நேரம் கிடைத்துள்ளது, பயண அலுப்பு இல்லை என்று தெரிவித்துள்ளனர். 20 சதவீதம் பேர் இப்படி வேலை செய்வதன் மூலமாக 5,000 ரூபாயில் இருந்து 10,000 வரை சேமிக்க முடிகிறது. இது சராசரி சம்பளத்தில் 17 சதவீதம் ஆகும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

Work from home: Employee benefits set for overhaul as companies redraft rules

மேலும் 19 சதவீதம் பேர் தாங்கள் 10,000 ரூபாய்க்கும் மேல் சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது இந்தியா போன்ற நாடுகளில் சேமிப்பதற்கு கடினமான தொகையாக கருதப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சில அசவுகரியங்கள்:

ஆனால், சிலர் இப்படி வீட்டில் இருந்து வேலை பார்ப்பது சவால்கள் நிறைந்ததாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். 23 முதல் 27 சதவீதம் பேர் தாங்கள் இப்படி வீட்டில் இருந்து வேலை செய்வதால் மனஅழுத்தம் மற்றும் தனிமையை அதிகமாக சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சசிகலா வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டிய வருமானத்துறை!!

depression caused in work from home
depression caused in work from home

17 சதவீதம் பேர் தங்களுக்கு பணியிட சூழல் இல்லாததால் தங்களது படைப்பாற்றல் மற்றும் வேலை செய்யும் திறன் குறைந்துள்ளதாக கூறினர். 71 சதவீதம் பேர் நெட்ஒர்க் பிரச்சனைகளை அதிகமாக சந்தித்ததால் வீட்டில் இருந்து வேலை செய்ய விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -