300 கோடிக்கு மேல் சொத்துக்கள் முடக்கம் – சசிகலா வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டிய வருமானத்துறை!!

0
sasikala
sasikala

சசிகலா பினாமி பெயரில் 300 கோடிக்கு மேல் 65 சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. இதனால் போயஸ்கார்டனில் கட்டி வரும் சசிகலாவின் புதிய வீட்டின் முன் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சசிகலா

2017 இல் சிறையில் இருக்கும் சசிகலாவின் வீடு மற்றும் அவரின் உறவினர்களின் வீடு, அலுவலகம் என 187 இடங்களில் ஐந்து நாட்கள் வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர். போலி நிறுவனங்களை துவங்கி 1500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

income tax notice
income tax notice

மேலும் சொத்துக்கள் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என சோதனை மூலம் கிடைத்த ஆவணங்கள் மூலம் சிக்கின. சிக்கிய ஆவணங்களை வைத்து அனைத்து போலி சொத்துக்களை வருமான வரி துறையினர் கண்டறிந்தனர். மேலும் 2019 இல் 1500 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியது.இந்நிலையில் மேலும் வருமான துறையினர் 300 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் கைப்பற்றியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ஹிதராபாத்தில் உள்ள அரிச்சந்திரா எஸ்டேட் நிறுவனத்தின் பெயரில் உள்ள 65 சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

income tax notice
income tax notice

கிட்டத்தட்ட இதன் மதிப்பு 300 கோடியை தாண்டி இருக்கும். இந்த சொத்துக்கள் அனைத்தும் 2003 -2005 களில் பரிமாற்றம் அடைந்துள்ளது. சொத்துக்களை கைப்பற்றியது பற்றி பெங்களூரில் உள்ள சசிகலாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது”. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் இது குறித்த நொடிஸ்களை போயஸ்கார்டனில் கட்டி வரும் சசிகலாவின் புதிய வீட்டின் முன் ஒட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here