Monday, May 6, 2024

ஆன்லைன் பாடம் புரியாததால் பள்ளி மாணவர் தற்கொலை – ஆண்டிபட்டியில் சோகம்!!

Must Read

ஆன்லைன் வகுப்பு புரியாத காரணத்தால் 16 வயது சிறுவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்பு:

தேனி மாவட்டம் கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், இளங்கோவன். இவரது மகன் விக்கிரபாண்டி, 16 வயது சிறுவன். இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கொரோனா பொது முடக்க காரணத்தால் இவரது பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தி உள்ளனர்.

நடத்தியது புரியவில்லை:

ஆனால், ஆசிரியர்கள் எப்படி நடத்தினார்கள் என்று தெரியவில்லை, அது விக்கிரபாண்டிக்கு புரியவில்லை போலும். இதனால் அவரது தந்தை இளங்கோவனிடம் இவர் தனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

online class
online class

ஆனால், இவரது தந்தை அதனை ஒரு பொருட்டாக கருதாமல் இவரை திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன விக்கிரபாண்டி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி:

இதனை பார்த்த அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக தேனி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட விக்கிரபாண்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அப்பகுதியை சேர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் 4 எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா உறுதி!!

கடந்த சில நாட்களுக்கு முன் இதே போல் ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தொடர்ச்சியாக ஆன்லைனில் நடத்தபடும் பாடங்கள் புரியவில்லை என்று கூறுகின்றனர். அரசு இதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -