மேலும் 4 எம்.எல்.ஏ.,க்களுக்கு கொரோனா உறுதி – மாநில அரசு அதிர்ச்சி!!

0

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று மேலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (எம்.எல்.ஏ) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அங்கு ஏற்கனவே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ மற்றும் மூன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

கொரோனா பாதிப்பு:

ராஜஸ்தானில் இன்று 5 பேர் புதிதாக கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து உள்ளனர். அங்கு எம்எல்ஏ.,க்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அம்மாநில முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் எம்.எல்.ஏ.க்கள் விரைவாக குணமடைந்து பணிக்குத் திரும்ப தான் விரும்புவதாக தெரிவித்து உள்ளார். இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான ராம்லால் ஜாட் ஜி மற்றும் ரபீக் கான் ஜி, பாஜக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திர ரத்தோர் ஜி, அசோக் லஹோட்டி ஜி மற்றும் அர்ஜுன் லால் ஜீங்கர் ஜி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ராஜஸ்தானில் இன்று 690 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,853 ஆக அதிகரித்து உள்ளது. புதிய பாதிப்புகளில் ஜெய்ப்பூரில் 124, பிகானேரில் 79, ஜோத்பூரில் 75, ஆல்வாரில் 71, அஜ்மீரில் 70, ஜலவாரில் 65, பன்ஸ்வாராவில் 36 ஆகிய நகரங்களில் பதிவாகி உள்ளது. தற்போது 14,514 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 67,093 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கோவா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

ஜெய்ப்பூரில், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 278 ஆகவும், ஜோத்பூரில் 101, பிகானேரில் 76, கோட்டாவில் 75, அஜ்மீரில் 73 மற்றும் பாரத்பூரில் 69, பாலியில் 44, நாகவூரில் 43, உதய்பூரில் 28, ஆல்வார் 22 ஆகவும் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here