கோவா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

கொரோனா பாதிப்பு:

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பதிவில் “எனக்கு COVID-19 தொற்று உறுதியாகி உள்ளது. அறிகுறிகள் எதுவும் இல்லாத காரணத்தால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். வீட்டிலிருந்து எனது கடமைகளை நான் தொடர்ந்து செய்வேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று ஒரே நாளில் கோவாவில் இதுவரை இல்லாத அளவு 588 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்புகள் 8,006 ஆகவும், உயிரிழப்புகள் 194 ஆகவும் உயர்ந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதுவரை 13,850 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது வரை 2,02,730 மாதிரிகள் சோதிக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவில் ஒரு நாளைக்கு சராசரியாக 381 பேர் தற்கொலை – அதிர்ச்சி தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here