முகத்தில் படிந்துள்ள கருமைகளை நீக்க அருமையான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!!

0
face mirror
face mirror

நாம் எவ்வளவு தான் மேக்கப் செய்தாலும் முகத்தில் படிந்துள்ள கருமை நம் அழகையே கெடுத்து விடுகிறது. முகத்தை சுற்றியுள்ள ஆங்காங்கே படிந்துள்ள கருப்புகளை நீக்க சில வழிமுறைகள் உள்ளன.

முகக்கருமை நீங்க

முகத்தில் நெற்றி, கன்னம் உதடுகளை சுற்றி சிலருக்கு கருமையாக இருக்கும். மேலும் கருவளையமும் இருக்கும். இதற்கு காரணம் சரியான பராமரிப்பின்மையே. மேலும் நெற்றி மற்றும் முகத்தில் சில இடங்களில் கருமை ஏற்ப்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் உள்ள பொடுகு தான்.

dark circles
dark circles

தலையை முடிந்தவரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தலைமுடி அசுத்தமாக இருந்தால் முகத்தில் அரிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே தான் நாம் தொடர்ந்து முகத்தை பராமரித்து வர வேண்டும்.

முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்க சில வழிமுறைகள் உள்ளன. அவைகளாவன,
dark circles
dark circles
  • முகத்தை 1 நாளில் முடிந்தவரை 4 முறையாவது கழுவ வேண்டும்.
  • சோப்புகளை பயன்படுத்துவதால் கூட சிலருக்கு சேராமல் கருமை ஏற்படலாம். இதனால் சோப்பு பயன்படுத்தாமல் கடலை மாவு, பயித்தமாவு சேர்த்து குளிக்கலாம்.
  • தேனை முகத்தில் தினமும் தேய்க்கலாம்.
  • சந்தனத்தை தேன் கலந்து முகத்தில் தேய்த்து குளிக்கலாம்.
  • வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் உடல் சூடு குறையும்.
  • முல்தானி மெட்டி, தேன், கற்றாழை போன்றவற்றை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • தினமும் மஞ்சள் தேய்த்து குளித்தால் முகத்தில் உள்ள கருப்புகள் மறையும்.
  • எலுமிச்சை பழத்தை முகத்தில் தேய்த்து 5 நிமிடம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும். மேலும் எண்ணெய் பதார்த்தங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here