சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முற்றிலும் நிறுத்தம் – மத்திய அரசு நடவடிக்கை!!

0
Gas Cylinder
Gas Cylinder

உலகளாவிய சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் உள்நாட்டு சமையல் எரிவாயுவிற்கு மானியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு முற்றிலுமாக நிறுத்தி உள்ளது.

சமையல் எரிவாயு மானியம்:

செப்டம்பர் 1 நிலவரப்படி, மானியம் மற்றும் மானியமில்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயுவின் விலை வித்தியாசம் ஒரு சிலிண்டருக்கு ரூ. 54 ஆக உள்ளது. விலையில் பெரிதளவு வித்தியாசம் இல்லாத காரணத்தால் மானியம் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து மானியம் மற்றும் மானியமில்லாத சமையல் எரிவாயு இடையேயான விலை இடைவெளி குறைந்து வருவதால், கடந்த நான்கு மாதங்களாக அரசாங்கம் எந்தவொரு மானிய தொகையையும் பயனாளர் கணக்கில் செலுத்தவில்லை.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Gas Cylinder
Gas Cylinder

இதனால் அரசுக்கு ரூ. 20,000 கோடி மிச்சமாகும். இதனை கோவிட் -19 நிவாரணத் திட்டங்களுக்காக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. எல்பிஜி மானியத்திற்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டிற்கான ரூ .37,256.21 கோடியாக உயர்த்தப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை முதல் காலாண்டில், அரசாங்கம் மானிய விலையில் இருந்து சுமார் 1,900 கோடி ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்கள் கணக்கில் செலுத்தி உள்ளது.

சரிவை நோக்கி தங்கத்தின் விலை – பொதுமக்கள் நிம்மதி!!

இந்தியாவில் சுமார் 27.76 கோடி எல்பிஜி நுகர்வோர் உள்ளனர். இவர்களில், சுமார் 1.5 கோடி பேர் டிசம்பர் 2016 முதல் எல்பிஜி மானியம் பெற தகுதியற்றவர்கள், ஏனெனில் அவர்கள் ஆண்டுக்கு ரூ .10 லட்சத்திற்கு மேல் வரி விதிக்கக்கூடிய வருமானம் பெறுபவர்கள். ஏழைகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் இப்போது கவனம் செலுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here