வாயில் வைத்ததும் கரையும் வாழைப்பழ அப்பம் – எப்படி செய்றதுன்னு பாப்போம் வாங்க!!

0
rava sweet
rava sweet

முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். இதனை விரும்பாதவர்கள் யாரும் கிடையாது. அனைத்து சீசன்களிலும் வாழைப்பழங்கள் கிடைக்கும். காலை எழுத்தும் வாழைப்பழம் சாப்பிட்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது மூளைக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. இப்பொழுது அந்த வாழைப்பழத்தை வைத்து சூப்பரான டிஷ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

banana sweet
banana sweet

வாழைப்பழம் 2

சர்க்கரை 3 தேக்கரண்டி

ரவா அரை கப்

சோடா உப்பு அரை ஸ்பூன்

பால் 1 டம்ளர்

கோதுமை மாவு ஒரு கப்

ஏலக்காய் போடி கால் தேக்கரண்டி

உப்பு தேவையான அளவு

எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து மசித்து எடுத்துக்கொள்ளவும். பிறகு 3 தேக்கரண்டி சர்க்கரையை மிக்ஸியில் பொடி செய்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது நாம் மசித்து வைத்துள்ள வாழைப்பழத்தில் சேர்த்து பிசையவும். அதன்பின் அதில் அதில் ஏலக்காய் போடி சேர்த்து கலக்கவும்.

banana sweet
banana sweet

அதனை அப்படியே 5 நிமிடத்திற்கு விட்டு விடவும். இப்பொழுது அதில் 2 கப் சோதுமை மாவு மற்றும் 1 கப் ரவை சேர்த்து கலக்கவும். இப்பொழுது கட்டி பதத்திற்கு வரும். அதனால் காய்ச்சாத பாலை அதில் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதனை கிளற வேண்டும். இதனை 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். இப்பொழுது ஒரு வாணலியில் 2 கப் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து ஜீரா செய்துகொள்ள வேண்டும்.

banana sweet
banana sweet

பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கலந்து வாய்த்த மாவை குழி கரண்டியில் எடுத்து மெதுவாக உற்ற வேண்டும். மொறுமொறுவென பொரித்து எடுக்க வேண்டும். பொரித்து எடுத்தவற்றை நாம் செய்து வைத்துள்ள ஜீராவில் போட்டு 15 நிமிடம் கழித்து சாப்பிட்டால் சுவை அள்ளும். இதில் நாம் வாழைப்பழம், கோதுமை ஆகிய பொருட்களை சேர்த்துள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது. வாழைப்பழம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here