கொரோனவிலிருந்து தப்பிக்க என்ன சாப்பிடலாம்.? வாங்க பாப்போம்.!

0
தமிழகத்தில் காய்கறிகள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!
தமிழகத்தில் காய்கறிகள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க நாம் எவ்வளவு தான் சுகாதார நடவடிக்கையை மேற்கொண்டாலும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அதனை கண்டிப்பாக முறியடிக்கலாம். அதற்கு நம் உணவு பழக்கமே மிக முக்கியமானது. கொரோனவை தடுக்க என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும் என சில பட்டியல்கள் உள்ளன.

கொரோனா வைரஸ்

கொரோனா முதல் 4 நாட்களுக்கு நம் கழுத்திலேயே தங்கி இருக்கும். பிறகு தான் அது கொஞ்சம் கொஞ்சமாக பரவ ஆரம்பிக்கும். நாம் ஆரம்பக்கட்டத்திலேயே கொரோனவை கண்டறிந்தால் அதிலிருந்து சுலபமாக வெளிவரலாம். நம் கழுத்திலிக்கும்போதே சளியை போக்கும் சில மருந்துகளை உட்கொள்வதால் அதனின் வீரியம் குறைகிறது.

உணவு வழிமுறைகள்

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வர வேண்டும். பின்பு பப்பாளியை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். உணவில் கருஞ்சீரகம் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். வால்நட்ஸ் தினமும் உட்கொள்ள வேண்டும்.

இஞ்சி, பூண்டு, அண்ணாச்சிப்பூ போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளவும் மேலும் பூண்டை பாலில் சேர்ந்து தூங்க போகும் முன் குடிக்கவும். நன்கு தூங்கினால் சளி உடலில் தங்காது. பாலில் பூண்டை சேர்த்து குடிப்பதால் நன்கு தூக்கம் வரும்.

பிற நாட்டு பழங்கள், காய்கறிகளை தவிர்த்து உள்ளூரில் விளைவதை வாங்கி சாப்பிடவும். அசைவ உணவை முற்றிலும் தவிருங்கள். முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுங்கள். சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் உணவில் தினமும் சேர்த்து கொள்ளலாம். இஞ்சியை சாறு எடுத்து அதில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

கருப்பு திராட்சை, ஸ்ட்ராபெரி, பிஸ்தா, நெல்லிக்காய், கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய், உலர்ந்த திராட்சை போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வரவும். பின்பு சக்கரவள்ளி கிழங்கில் எலுமிச்சை சாற்றை சேர்த்து சாப்பிடலாம்.

கீரை வகைகளை அடிக்கடி எடுத்து கொள்ள வேண்டும். அதனை சூப் செய்து பருகி வந்தால் நார்ச்சத்துக்கள் அதிகரிக்கும். ரசத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் அதில் சேர்க்கப்படும் சீரகம் மிளகு போன்றவை சளியை கட்டுப்படுத்தும். மேலும் ஆண்கள் தினமும் 3 துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் நல்லது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here