கொரானாவை கட்டுப்படுத்த மத்திய அரசு விதித்த 15 கட்டுப்பாடுகள் – என்னென்ன தெரியுமா..?

0

சீனாவில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிதாக 15 கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாடுகள்..!

  1. கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பாதீர்கள். சமூக வலைதளங்களில் தேவையற்ற தகவலை பரப்பாமல் அமைதி காப்பது நமது கடமையாகும்.
  2. ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கைகுலுக்குவதை தவிர்க்கவும். பாசத்துடன் கைபிடிப்பதையும், கட்டிப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  3. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனம் தேவை. எங்கிருந்து என்ன பொருட்கள் வாங்குகிறோம் என்பதில் கூடுதல் கவனம் வேண்டும்.
  4. நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்களும் மூடப்படும். மாணவர்கள் வெளியே எங்கும் செல்லாமல் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும்.
  5. கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாம்
  6. திருமண மண்டபங்களில் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்த வேண்டும். புதிய நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
  7. ஓட்டல்கள், விடுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். அங்கு கைகழுவுவதற்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
  8. தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும்.
  9. மக்கள் தேவையின்றி பஸ்கள், ரெயில்கள், விமானங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
  10. அனைத்து வணிக வளாகங்களிலும் ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளியில் வரும் வகையில் ஏற்பாடு செய்வது நல்லது.
  11. பெரிய நிறுவனங்கள் ஆலோசனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்தலாம்.
  12. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சிறுவர்களிடம் எப்படி பழக வேண்டும்? என்பதை மருத்துவமனைக்கு வருபவர்களிடம் டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்.
  13. உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்க வேண்டும்.
  14. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யக் கூடாது.
  15. வியாபாரிகள் சங்கத்தினர் கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சந்தைகளில் மக்கள் நெருக்கமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here