தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!!

0

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோயம்புத்தூர் மாவட்டம், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 34 டிகிரி செல்சியஸ் மற்றும் 27ºC ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

rain
rain

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளுர்), பூண்டி (திருவள்ளுர்) ஆகிய பகுதிகளில் 9 செமீ மழையும், குறைந்தபட்சமாக வால்பாறை (கோவை), குளித்தலை (கரூர்), கொடுமுடி (ஈரோடு), ராதாபுரம் (திருநெல்வேலி) ஆகிய பகுதிகளில் 1 செமீ மழைப்பொழிவும் பதிவாகி உள்ளது.

20 வயதில் 12 வயது மூத்தவருடன் திருமணம் – ஷாக் கொடுத்த பிரபல சீரியல் நடிகை!!

செப் 19 முதல் 21ம் தேதி வரை மன்னார் வளைகுடா பகுதியில் 45-55 கிமீ வேகத்துடன் பலத்த காற்று வீசும் என்பதால் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் இந்த கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் கேரளா-கர்நாடக கடற்கரைகள், லட்சத்தீவு, வங்காள விரிகுடா & அந்தமான் கடல் பகுதிகளிலும் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here