இதய நோய் பிரச்சனை வராமல் தடுக்க உதவும் உணவு வகைகள் – இதோ உங்களுக்காக!!

0
heart disease
heart disease

மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்த மாரடைப்பு, இதய மின்செயல்பாடுகள், இதய அழுத்தம் போன்றவற்றை குறைக்க சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பொருட்கள் நமக்கு உதவுகின்றனர்.

இதய ஆரோக்கியம்

நமது இதயம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நம்மால் உயிர் வாழ முடியும். அதிகப்படியான கொழுப்பு, மன அழுத்தம் போன்றவையே நம் இதயத்தை வலுவிழக்க செய்கிறது. இதனாலேயே இதய நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் 40 வயதினருக்கு கூட இப்பொழுது இதய நோய் அசால்டாக வருகிறது. இதற்கு உணவு பழக்கங்களும் முக்கிய காரணம்.

heart disease
heart disease

ஏனெனில் பலர் துரித உணவிற்கு அடிமையாகியுள்ளனர். இந்த வயதில் இந்த பொருட்கள் தான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இல்லாமல் சாப்பிடுவது தான் மாரடைப்புக்கு முக்கிய காரணம். எனவே இதய நோய் உள்ளவர்கள் சில ஊட்டச்சத்து பொருட்களை உட்கொள்வது மூலம் இதய ஆரோக்கியத்தை பேணலாம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

vitamin-c
vitamin-c

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த அழுத்தம் தான் இதயத்தை பாதிக்கும். எனவே ஆரஞ்சு, கொய்யா, எலுமிச்சை, திராட்சை, ப்ரோக்கோலி, காலிஃளவர் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

vitamin-k
vitamin-k

‘வைட்டமின் கே’ நமது உடலில் ரத்த நாளங்களின் அடைப்பை தடுக்கிறது. இதனால் கீரைகள், ப்ரோக்கோலி, முட்டைகோஸ், கல்லீரல், இறைச்சி, வெண்ணெய் மற்றும் முட்டை போன்றவைகளில் வைட்டமின் கே அடங்கியுள்ளது.

zinc
zinc

ஜிங்க் இதயத்தை பாதிக்கும் ஆக்ஸினேற்ற அழுத்தத்தை சமாளிக்கிறது. எனவே ஜிங்க் நிறைந்த உணவுகளான இறைச்சி, பால், பருப்பு, முட்டை, முழுதானியம் மற்றும் ஷெல் மீன் போன்றவற்றை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

Best-Calcium
Best-Calcium

கால்சியம் இதயத்தின் மின் செயல்பாடுகளுக்கு மிக அவசியம் ஆகும். இந்த கால்சியம் இதயத்தில் தசை செல்களுக்குள் நுழைந்து அதன் செயல்பாட்டை ஒழுங்குப்படுத்துகிறது. எனவே கால்சியம் நிறைந்த பொருட்களான பால், சோயா பீன், தயிர், பிரட் போன்றவற்றை உண்ண வேண்டும்.

Calcium-Foods
Calcium-Foods

நமது இதயத்தை பாதுகாக்க சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் மற்றும் சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here