ஐபிஎல் 2020 ஸ்பெஷல் : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – ‘இரு அணிகள் இதுவரை’

0

பல்வேறு தடைகளுக்கு பிறகு ஐபிஎல் 13வது சீசன் இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணிகள் மோத உள்ளன. சர்வதேச அரங்கில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரசிகர்களிடம் எந்த அளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்துமா, அதைப்போல ஐபிஎல் தொடரில் சென்னை vs மும்பை மோதல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். இதுவரை இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டிகளின் விபரங்களை பார்க்கலாம் வாங்க..

சென்னை vs மும்பை:

முதல் போட்டியில் ரோஹித் சர்மா vs எம்.எஸ். தோனி, டி.ஜே. பிராவோ vs பொல்லார்ட் என பல ஒன் vs ஒன் மோதல் எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கி உள்ளது. லசித் மலிங்கா, ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் போட்டிகளில் இல்லாதது இரு அணிகளுக்கும் சற்று பலவீனமாகும்.

இரு அணிகள், இதுவரை:

மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸை 27 முறை எதிர்கொண்டுள்ளது. இதில் 18 போட்டிகளில் வென்றதன் மூலம் மும்பை முன்னிலை வகிக்கிறது, மேலும் விளையாடிய 27 போட்டிகளில் 11இல் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் 4 போட்டிகளில் மோதின. ஆனால் அதில் ஒன்றில் கூட சென்னை வெற்றி பெறவில்லை.

டாப் பேட்ஸ்மேன்கள்:

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, சி.எஸ்.கே-க்கு எதிராக மொத்தம் 614 ரன்கள் விலகியுள்ளார். மறுபுறம் சி.எஸ்.கே-வின் சுரேஷ் ரெய்னா எம்.ஐ.க்கு எதிராக 704 ரன்கள் எடுத்துள்ளார். ரெய்னா போட்டிகளில் இருந்து விலகி உள்ளதால், எம்.எஸ்.தோனி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. தோனி இதுவரை எம்.ஐ.க்கு எதிராக 663 ரன்கள் அடித்துள்ளார்.

டாப் பவுலர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்கா 31, பொல்லார்ட் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அதிகபட்சமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here