Sunday, May 5, 2024

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை:

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள சேலம், நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரியவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நீட் தேர்வு செப்.13 இல் கண்டிப்பாக நடைபெறும்!!

How Indonesians control nature: Meet the rain shamans - People - The Jakarta Post

வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மழை பொழிவு:

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் திருச்சியில் உள்ள வத்தலை அணை அருகே அதிகபட்சமாக 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது. செய்யார், தேவலா, சமயபுரம் மற்றும் கலவை பகுதிகளில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது, பரமத்தி பகுதியில் குறைந்தபட்சமாக 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா, தென்மேற்கு அரபிக்கடல் பகுதி, குமரிக்கடல், வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -