எண்கணித விதிப்படி உங்கள் வாழ்கை எப்படி இருக்கும்?? தெரிஞ்சுக்கலாம் வாங்க!!

0
numerological
numerological

எண் கணித முறையில் வாழ்க்கையில் நமது பெயரின் இலக்க எண்ணிக்கையை வைத்து நாம் எப்படிபட்டவர்கள் என்பதை கணிக்க முடியும். நாம் பிறந்த தேதி எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை வைத்து ஒவ்வொரு எண்ணிற்கும் சில குணநலன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். வாங்க தெரிஞ்சிக்கலாம்.

எண் கணிதம்:

numberological

இப்பொழுது நாம் பிறந்த தேதி அல்லது நமது பெயரில் உள்ள இலக்க எண்களின் கூட்டுத்தொகை வைத்து நமது விதியெண்ணை எப்படி கணிப்பது என்று பாப்போம்.

  • A, I, J, Q, Y – 1
  • B, K, R – 2
  • C, G, L, S – 3
  • D, M, T – 4
  • E, H, N, X – 5
  • U, V, W – 6
  • O, Z – 7
  • F,P – 8

மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களுக்கு இணையான எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் உங்கள் பெயருக்கு ஏற்ற எண்களை கூட்ட வேண்டும். இப்பொழுது உங்கள் பெயர் Swarna Latha என்று வைத்துக்கொண்டால் S-3, W – 6, A – 1 , R – 2, N – 5, A – 1, L – 3, A -1, T – 4, H – 5, A – 1

இதன் கூட்டு தொகை 3+6+1+2+5+1+3+1+4+5+1 = 31. ஆனால் ஒற்றைப்படையான எண் வரும் வரை இதனை கூட்ட வேண்டும். அப்படியானால் 3+1= 4 அப்பொழுது இந்த பெயருக்கான விதி எண் 4. இதே போல் தான் பிறந்த தேதிக்கும் கணக்கிட வேண்டும். 17.11.1994 இதன் கூட்டுத்தொகை 1+7+1+1+1+9+9+4 = 33 ஆகும். 3+3 = 6 உங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் விதி எண் 6 ஆகும். இவர்களின் பெயர் U, V, W என்ற எழுத்தில் வைத்தால் வாழ்கை பிரகாசமாக அமையும்.

உங்கள் விதி எண் படி குணநலன்கள்

numerology
numerology
  • எண் ஒன்றை விதி எண்ணாக பெற்றவர்கள் சுதந்திர எண்ணத்துடன் இருப்பர். தனது குறிக்கோளை அடைவதில் தெளிவாக இருப்பர்.
  • எண் இரண்டை விதி எண்ணாக பெற்றவர்கள் கருணை குணமிக்கவராக இருப்பர். வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளில் எப்படி தீர்வு காண வேண்டும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பர்.
  • எண் மூன்றை விதி எண்ணாக கொண்டவர்கள் இயல்பாக பழகும் தன்மைகொண்டவர். மேலும் நகைச்சுவை குணம் படைத்தவர்கள்.
  • எண் நான்கை விதி எண்ணாக கொண்டவர்கள் எதார்த்த குணம் கொண்டவர்களாக இருப்பர். மேலும் பிறருக்கு உதவி செய்வதில் விருப்பம் உள்ளவராக இருப்பர்.
  • எண் ஐந்தை விதி எண்ணாக கொண்டவர்கள் யாரிடமும் அவ்வளவு சீக்கிரமாக பழக மாட்டார்கள். ஒரு விஷயத்தை எடுத்தால் சாதித்து காட்டியே தீர்வார்கள்.
  • எண் ஆறை விதியெண்ணாக கொண்டவர்கள் பொறுப்புணர்வு அதிகம் உள்ளவராக இருப்பார்கள். இயல்பாகவே நல்லவராகவும், நேர்மையானவராகவும் இருப்பர்.
  • எண் 7 – ஐ விதி எண்ணாக கொண்டவர்கள் எதிலும் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள். எதிலும் தீர விசாரித்து தான் தனது முடிவுகளை எடுப்பர்.
  • எண் எட்டை விதி எண்ணாக கொண்டவர்கள் பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் இருப்பார். செயல் வீரராகவும் திகழ்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here