Saturday, May 18, 2024

பிரதமர் பாராட்டிய சலூன்கடைக்காரர் – அவரது குடும்பத்துடன் பா.ஜவில் இணைந்தார்!!

Must Read

பிரதமர் மோடி கடத்த சில மாதங்களுக்கு முன் பாராட்டிய மதுரை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துள்ளார்.

கொரோனா கால பொது முடக்கம்:

கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா நோய் பரவல் அதிகமாக இருந்தது. நோய் பரவ ஆரம்பித்ததும் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் அதிகமுள்ள பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாற்றினார். அதேபோல் மதுரையில் முதன் முதலாக மேலமடை பகுதியை தான் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர்.

நீட் தேர்வு செப்.13 இல் கண்டிப்பாக நடைபெறும்!!

இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அந்த பகுதியை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் தனது மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாயில் தன் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனால் இவரை பலரும் பாராட்டினர்.

பிரதமர் பாராட்டு:

இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி மே மாதம் நடைபெற்ற “மன் கி பாத்” நிகழ்ச்சியில் அவரை பாராட்டினார். அவர் கூறியதாவது “மக்களுக்கு உதவி செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சலூன்கடைக்காரர் பாராட்டுதலுக்கு உரியவர். எனது மனமார்ந்த பாராட்டுகளை அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிருந்தார்.

அவரை தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் முருகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

பாரதிய ஜனதா கட்சியில் இணக்கம்:

தற்போது சலூன்கடைக்காரர் மோகன், அவரது மனைவி ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். அவர்கள் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் கட்சியில் இணைத்துள்ளனர்.  தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் கட்சியில் இணைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -