தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
weather forecast in tn
weather forecast in tn

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலை முதலே மழை பெய்து வரும் சூழலில் கனமழை தொடர்ந்து பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து இடங்களிலும் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. தற்போது தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், புதுவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்று அதிகாலை முதலே சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு தான் இருக்கின்றது. இதே போல் கனமழை பெய்வது தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா பாசத்திற்காக ஏங்கும் ஹேமாவிற்கு ஆதரவு தரும் கண்ணம்மா – பாச போராட்டங்களுடன் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!

நாளை தமிழகத்தின் நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை மதுராந்தகத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. தரமணி, கேளம்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணா பல்கலை, திண்டிவனம் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here