சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை – செம்பரப்பாக்கம் மற்றும் புழல் ஏரிகள் திறப்பு!!

0

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இன்று வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று பிற்பகல் சென்னையில் ஏரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையில் அனைத்தும் அளவிற்கு அதிகமாகவே இருக்கும். அதிக மக்கள் தொகை, அளவிற்கு அதிகமாக வெயில் அடிக்கும், அதேபோல் மழை பெய்தாலும் அளவிற்கு அதிகமாக பெய்யும். ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்கள் நடுக்கத்தில் இருப்பார்கள். காரணம் டிசம்பர் மாதம் தான் சென்னையில் பல துயர சம்பவங்கள் நடைபெறும் முக்கியமாக அளவிற்கு அதிகமாக மழை பெய்து வெள்ளம் ஊருக்குள் வரும் நிலை ஏற்படும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த அளவிற்கு மழை பெய்யவில்லை என்றாலும் ஜனவரி மாதம் தொடங்கியும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை புறநகர் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தொடர் மழைபெய்து வருகிறது.

நயன்தாராவிற்கு பிப்ரவரியில் திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

மேலும் எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, கோடம்பாக்கம், டி நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், நங்கநல்லூர், வண்டலூர் போன்ற பகுதிகளில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு தகவல் தெரிவித்தது. ஆனால் தற்போது 10 மணி தாண்டியும் இன்னும் சென்னையில் உள்ள இந்த பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

தொடர் மழை காரணமாக செம்பரபாக்கம் ஏறி 23 அடியை நெருங்குகிறது. எனவே பாதுகாப்பு கருதி பிற்பகல் 2 மணி அளவில் ஏரியில் இருந்து உபரி நீர்களை திறப்பதற்கு முடிவு செய்துள்ளனர். முதற்கட்டமாக 500 கன அடி நீர் விகிதமாக திறக்கப்படும். மேலும் இதேபோல் சென்னை அருகே உள்ள புழல் எரியும் முதற்கட்டமாக 500 கன அடி விகிதமாக இன்று பிற்பகல் திறக்கப்படவுள்ளது. தற்போது ஏரிகள் திறக்கப்படுவதால் சென்னையில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here