அம்மா பாசத்திற்காக ஏங்கும் ஹேமாவிற்கு ஆதரவு தரும் கண்ணம்மா – பாச போராட்டங்களுடன் வெளியான ‘பாரதி கண்ணம்மா’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா சென்னை வந்ததை அடுத்து லட்சுமி பாரதியிடம் ட்ரீட்மென்ட் செய்ய அழைத்துக்கொண்டு இருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்ட்டுகள் போயிக்கொண்டுள்ளது. எப்பொழுது பாரதிக்கு உண்மை தெரியவரும் என்பதும் தெரியவில்லை. அடுத்து என்ன தான் நடக்க போகிறதோ என்று மக்களும் பதட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஹேமா இத்தனை நாட்கள் அம்மா வேண்டும் என்று தவித்துக்கொண்டு இருந்தார். வீட்டில் உள்ளவர்களும் எப்படியோ சமாளித்தும் வந்தனர். ஒரு பக்கம் லட்சுமி அப்பா எங்கே என்று அடம் பிடிக்க இதுவே வேலையாக பல பாரதி கண்ணம்மா கதைக்களம் நகர்ந்துகொண்டுள்ளது.

நயன்தாராவிற்கு பிப்ரவரியில் திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. கண்ணம்மாவை ஒரு ஆட்டோக்காரர் ஸ்கூலுக்கு அழைத்து வருகிறார்.  ஆனால் நீ கொடுக்குற சாப்பாட்டுல இனிமேல் இந்த ஸ்கூலில் டீச்சர் எல்லாம் உங்க சாப்பாடை தான் கேப்பாங்க என்று அழைத்து வருகிறார்.

கண்ணம்மா வரும் அதே ஸ்கூலில் தான் ஹேமாவும் படிக்கிறார். ஹேமா சாப்பாடிற்காக வெளியில் அமர்ந்திருக்க கண்ணம்மா அவரை பார்க்கிறார். ஹேமாவிற்கு கிராமத்தில் பார்த்த நியாபகம் வருகிறது. ஹேமாவிடம் சாப்பிடலையா?? என்று கேட்க அப்பா சாப்பாடு கொண்டு வருகிறார் என்று சொல்கிறார்.

தன்னிடம் இருக்கும் சாப்பாட்டை ஹேமாவிற்கு ஊட்டி விடுகிறார் கண்ணம்மா. கண்ணம்மாவிற்கு ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. பாரதி வேறு ஹேமாவிற்காக சாப்பாட்டை எடுத்து வருகிறார். இப்பொழுது கண்ணம்மாவும் பாரதியும் பார்ப்பார்களா?? என்பதும் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here