இந்தியாவில் அதிவேகமாக பரவும் உருமாறிய கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்வு!!

0

இந்தியாவில் தற்போது புதிதாக உருமாறியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனை அடுத்து இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் அனைவரும் கொரோனா ப்ரோசோதனையை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருமாறிய கொரோனா:

இங்கிலாந்தில் கடந்த டிசம்பர் மாதம் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. முன்னதாக பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பினை விட இது 70 சதவீதம் அதிகமாக பரவியது. இதன் காரணமாக, இங்கிலாந்தில் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதே போல் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே போல் அங்கிருந்து வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் அடங்குவர். இப்படியாக நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. படிப்படியாக பரவல் எண்ணிக்கை 25 இல் இருந்து 38 ஆக உயர்ந்தது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசு ஒதுக்கி வைத்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் உள்ளனர்.

குக் வித் கோமாளியின் கெஸ்டாக வரும் சிவகார்த்திகேயன் – வேற லெவலில் வெளியான ப்ரோமோ!!

அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் முக்கிய நகரங்களான புனே, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது இன்று பாதிப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இதனால், தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மட்டும் அல்லாமல் மரபணு பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here