டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானம் – உச்சநீதிமன்றம் அனுமதி!!

0
no reservation for government doctors for pg

டெல்லியில் 971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்கு டெல்லி உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. கட்டுமானத்தை பல்வேறு காரணங்களுக்காக நிறுத்த வேண்டும் என்று வழங்கப்பட்ட மனுவின் அடிப்படையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டுமானம்:

டிசம்பர் 10 ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் அமைய இருக்கும் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கட்டடங்களை கட்டுவதற்கான கட்டுமான பொறுப்பு சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட் மீது கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்ட்ரல் விஸ்டா ப்ராஜெக்ட் கட்டுமான கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாகவும் அதனை உடனே நிறுத்த வேண்டும் எனவும் பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

நயன்தாராவிற்கு பிப்ரவரியில் திருமணமா?? இணையத்தில் கசிந்த தகவல்!!

இந்த மனுக்கள் மீதான வழக்கு கடந்த 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் விசாரணை முடியும் வரை எந்த விதமான புதிய கட்டுமான பணிகள் நடைபெற கூடாது எனவும், பழைய கட்டடங்களை இடிக்ககூடாது எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மரங்கள் எதுவும் வெட்டப்படக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து இந்த வழிமுறைகளை மீரமாட்டோம் என மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதனை அடுத்து இந்த வழக்கிற்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் அனுமதி:

கன்வில்கர்,மஹேஸ்வரி உள்பட மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த இரண்டு நீதிபதிகளும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். மற்றுமொரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். இதனால் நாடாளுமன்ற கட்டடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களுக்கு அனுமதி அளித்து டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

1921 ல் கட்டப்பட்ட இப்போதிருக்கும் நாடாளுமன்றமானது 100 வருடம் பழமை வாய்ந்தது. 1224 இறுக்கைகளுடன் அமையப்போகும் தற்போதைய நாடாளுமன்றம் ரூ 971 கோடி செலவில் கட்டப்படப்போகிறது. இந்த கட்டிடம் சுமார் 64,500 சதுர அடிகளாக கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ல் இதன் கட்டுமான பணிகள் முடிவடையும் என்பது கூடுதல் தகவல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here