Saturday, April 27, 2024

தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும், மழைக்கு வாய்ப்பில்லை – வானிலை மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. நாளையும் இதே வானிலை தான் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான கனமழை:

தமிழகத்தில் கடந்நத அக்டோபர் மாதம் வளிமண்டல சுழற்சி மற்றும் பருவநிலை மாற்றம் ஏற்பட்டது. இதனை அடுத்து தொடர்ச்சியாக அடைமழைக்காலத்தில் நன்றாக மழை பெய்ந்தது. சில வானிலை மாற்றங்களால் கடந்த மாதம் “நிவர்” புயல் உருவானது. அரசு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதால் புயல் அவ்வளவாக பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து தமிழகத்தில் தொடர்ச்சியாக 5 புயல்கள் உருவாகும் என்று வதந்தி ஏற்பட்டது. அதனை வானிலை மைய அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். இன்றைய வானிலை குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும்.

இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் – சென்னை கமிஷனர்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் தான் இருக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள எத பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கும் எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -