Friday, March 29, 2024

‘இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்’ – முக ஸ்டாலின் ட்வீட்!!

Must Read

நடிகர் ரஜினிகாந்த இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதை அடுத்து அவருக்கு திமுக கட்சியின் தலைவர் ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசியில் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ரஜினிகாந்த் பிறந்த தினம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் “சூப்பர் ஸ்டார்” என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கர்நாடகா மாநிலத்தில் பிறந்து அரசு பேருந்து கண்டக்டராக செயல்பட்டு, தனது கடின முயற்சி காரணமாக இன்று இவ்வளவு பெரிய இடத்தில் உள்ளார். நடிப்பு துறையில் தான் கொண்ட ஆர்வம் காரணமாக சினிமா துறையில் சாதித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்டியானவருக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், திரையுலகினர் என்று அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அப்படியாக திமுக கட்சியின் தலைவரான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன். நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினை தெரிவித்தேன்” இவ்வாறாக பதிவிட்டுள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -