Tuesday, April 30, 2024

சில மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் – வானிலை மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், அக்டோபர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர் மழை:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக எல்லா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நாளை, தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி மற்றும் கோவை போன்ற மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுகள் இரு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுமா?? கல்வித்துறை விளக்கம்!!

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை:

எப்போதும் செப்டம்பர் மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை முடிந்து விடும். அதே போல் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும். இந்த வருடமும் அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

chennai meterological center
chennai meterological center

இது குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கையில், வரும் அக்டோபர் 9 ஆம் தேதி வடக்கு அந்தமான், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

குமரிக்கடல் பகுதிகளில் காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 முதல் 45 மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக மகளிர் உரிமைத்தொகை.., புதிய பயனர்கள் இந்த தேதியில் இணைப்பு.., விண்ணப்பங்கள் குறித்த அப்டேட்!!

தமிழகத்தில் இலலதரசிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. தேர்தல் காரணமாக புது...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -