சுவையான செட்டிநாடு ‘காளான் பிரியாணி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
Mushroom-Biryani
Mushroom-Biryani

காளானில் அதிக மருத்துவ குணநலன்கள் உள்ளன. பெரியவர்களும் இதனை உணவில் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு இது மிகவும் ஏற்றது. இது எளிதில் ஜீரணமாகும் உணவு என்பதால் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது அதிகளவு சுவையுடனும் இருக்கும் அதனால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இப்பொழுது இந்த காளானை வைத்து சுவையான பிரியாணி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

காளான் – 500 கிராம்

பிரியாணி அரிசி – 1/2 கிலோ

பட்டை

கிராம்பு

பிரியாணி இலை

இஞ்சி – சிறிது

பூண்டு – 5 பல்

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 3

தக்காளி – 3

பச்சைமிளகாய் – 5

எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை

முதலில் கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் பட்டை , கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். அதன் பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இப்பொழுது 2 பச்சை மிளகாய் இஞ்சி சிறிது மற்றும் பூண்டு 5 சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

Mushroom-Biryani
Mushroom-Biryani

இவற்றை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் வெங்காத்தை சேர்க்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்த தக்காளியை அதில் சேர்த்து கிளறவும். இப்பொழுது மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் காளானை சேர்த்து வதக்கவும்.

mushroom biriyani
mushroom biriyani

இப்பொழுது அதில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்பொழுது தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்கவும். மூடி போட்டுவேக வைக்கவும். தண்ணீர் வற்றி அரிசி ஓரளவிற்கு முக்கால் பதம் வெந்ததும் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் அதன் மேலும் பிரியாணி பாத்திரத்தை வைக்கவும். அதன் மேல் ஒரு ஒரு தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தை வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான காளான் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here