ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவும் அபாயம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!!

0

அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில், ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதை ரிசர்வ் வங்கி உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது. இதனால் முடிந்தவரை ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல்:

சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று மற்ற நாடுகளுக்கு தீவிரமாக பரவியது. உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. பிற நாடுகளில் பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் குறையத் தொடங்கவில்லை. கொரோனா பாதிப்பால் கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில் (ஆன்லைன் கிளாஸ், தேர்வுகள்), டிஜிட்டல் உலகின் அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது என்றே கூறலாம். ஊரடங்கால் அனைவரும் வீட்டினுள் முடங்கி இருந்த போதிலும் ஆன்லைன் மூலமாக தான் எவ்வித பிரச்சனையும் இன்றி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியது. அதில் கொரோனா தொற்று ரூபாய் நோட்டுகள் மூலம் பரவுமா என்பதை தெளிவுபடுத்த கோரப்பட்டு இருந்தது. அதற்கு தற்போது ரிசர்வ் வங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனா போன்ற வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் அதன் பயன்பாட்டினை குறைத்துக் கொண்டு இன்டர்நெட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற டிஜிட்டல் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தே பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் தங்களால் இயன்றவரை ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் – மத்திய அரசிற்கு 1 வாரம் அவகாசம்!!

அதற்கான கட்டணத்தை அரசாங்கமே வங்கிகளுக்கு வழங்கவும் கூறப்பட்டு உள்ளது. இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனை அதிகரித்து ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து அதனை அச்சிடும் செலவு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே நிதிப்பற்றாக்குறை ஏற்படாது என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here