EMI தொகைக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் – மத்திய அரசிற்கு 1 வாரம் அவகாசம்!!

0

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் உரிய வருமானம் இன்றி கஷ்டப்பட்டதால் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கான தவணைத் தொகை (EMI) செலுத்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் ரிசர்வ் பேங்க் அனுமதியுடன் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் இது மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்த நிலையில் வங்கிகள் சார்பில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதில் கால அவகாசம் தரப்பட்ட EMI தொகைகளை திரும்ப செலுத்தும் பொழுது அதற்கும் தனியாக வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

emi

இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகினர். வங்கிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் விளக்கம் அளித்த மத்திய அரசு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என உறுதி அளித்தது. இது 2 கோடி ரூபாய்க்கு குறைவாக பெற்ற வங்கிக்கடன், வீட்டுக் கடன், வாகன கடன், கிரெடிட் கார்டு போன்ற அனைத்து விதமான கடன்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் பிராமணப் பாத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் மத்திய அரசு சமர்ப்பித்த பிராமணப் பத்திரத்தில் போதிய தகவல்கள் இல்லை. எனவே வட்டிக்கு வட்டி வசூல் இல்லை என்ற அறிவிப்பில் சந்தேகம் இருப்பதாக வாதிடப்பட்டது. மேலும் உச்சநீதிமன்றத்தின் பல கேள்விகளுக்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அடுத்த 7 நாட்களில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் விரிவான பிராமணப் பாத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் 13ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here