Tuesday, May 14, 2024

பொதுத் தேர்வுகள் இரு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்படுமா?? கல்வித்துறை விளக்கம்!!

Must Read

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டிற்கான (2020 -2021) 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், இரண்டு மாதங்கள் ஒத்திவைக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பரவல்:

கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால், இந்த கல்வி ஆண்டு துவங்கி 4 மாதங்கள் முடிவடைந்த நிலையிலும் கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. முன்னதாக அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் தங்கள் சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிக்கு வரலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், தமிழக முதல்வர் பழனிசாமி அந்த அரசாணையை நிறுத்தி வைத்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவது தாமதமாகிறது. குறிப்பிட்ட காலத்தில் பாடங்கள் முடிக்கப்படாததால், மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. மாணவர்களுக்கு இன்னும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் மட்டும் தான் தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.

மாணவர்களின் கல்வி நலன்:

இதன் காரணமாக மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் பொதுத் தேர்வினை நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, தேர்வுகளை வைத்தாலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும். காரணம், இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், மீன்வளம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் தான் அடிப்படை. இதனை சரியாக படித்தால் தான் மாணவர்களால் அடுத்து கல்லூரியில் கடினமில்லாமல் படிக்க முடியும். இவற்றை கருத்தில் கொண்டு தமிழக கல்வித்துறை ஒரு முடிவினை எடுத்துள்ளது.

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை – நகை வாங்க இதுதான் சரியான நேரம்!!

அது என்னவென்றால், 10, 11 & 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வைப்பதற்கு பதிலாக மே அல்லது ஜூன் மாத கடைசியில் வைக்கலாமா?? என்ற ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. இதனை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கூடுதலாக தேசிய அளவு தேர்வுகளான நீட், ஜே.இ.இ., கியூசெட் போன்ற தேர்வுகளுக்கு அடுத்த ஆண்டிற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படாததால் பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்கலாமா?? என்று கல்வித்துறை என்.டி.ஏ.,விடம் ஆலோசனை நடத்தவும் உள்ளனர். இதனால மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை தள்ளி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 12

https://www.youtube.com/watch?v=2Q4jGeuvI28  Enewz Tamil இன்ஸ்டாகிராம் TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி? இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீங்க!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -