ஷிவானியை வம்புக்கு இழுக்கும் சனம் ஷெட்டி – வெளியான பிக் பாஸ் ப்ரோமோ!!

0
shivani narayanan
shivani narayanan

மக்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 4 நேற்று தொடங்கியது. நேற்றைய நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களை பிக் பாஸ் அறிமுகப்படுத்தியது. பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் காலையில் டான்ஸ் ஆடும் ப்ரோமோ வெளியானது. தற்போது 2வது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் போட்டியில் மக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இவர்கள் பிக் பாஸ் சீசன் ஆரம்பிக்கும் முன்னர் ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஏனெனில் போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Shivani-Narayanan
Shivani-Narayanan

இதனால் மற்ற போட்டியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றைய எபிசோடில் அனைவரும் மகிழ்ச்சியாக உணவுண்ட காட்சிகளை நாம் பார்த்தோம். போன சீசன்கள் போல இவர்கள் சண்டையிட மாட்டார்கள் என்று நினைத்திருந்த நமக்கு முதல் நாளே சண்டை கிளம்பியுள்ளது.

Shivani-Narayanan
Shivani-Narayanan

வெட்டவெளிச்சமாகும் வெண்பாவின் சதித்திட்டம் – பாரதியிடம் உண்மையை கூறும் துர்கா!!

வழக்கம் போல பிக் பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் பலரும் ஷிவானியை டார்கெட் செய்துள்ளனர். எப்படி என்றாலும் ஒருவருக்கு பழகுவதற்கு நேரம் எடுக்க தானே செய்யும். ஆனால் பலரும் அவர் வேண்டும் என்றே செய்வது போல சித்தரித்துள்ளார். மேலும் சனம் ஷெட்டி தான் இதனை ஆரம்பித்து வைக்கிறார்.

Shivani-Narayanan
Shivani-Narayanan

ஷிவானிக்கு பக்குவம் இல்லை என்பது போல பேசுகிறார் சனம் ஷெட்டி. இது வரையிலும் வீட்டை விட்டு எங்கும் தங்காத ஷிவானிக்கு இந்த இடம் புதிதாக இருப்பதால் பழகுவதில் காலம் ஆகலாம். மேலும் அவருக்கு 19 வயது தான் ஆகிறது. சுரேஷ் என்பவரும் ஷிவானியை டார்கெட் செய்து தான் பேசுகிறார்.

Shivani-Narayanan
Shivani-Narayanan

இந்த ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பலரும் சனம் ஷெட்டி மற்றும் சுரேஷை திட்டி தீர்த்து வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது ஷிவானிக்கு அனுதாப ஆர்மி உருவாகும் என்று தெரிகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு ஷிவானிக்கு ஆதரவு அதிகரிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here