மாசுமருவற்ற சருமத்தை பெற வேண்டுமா?? சூப்பர் டிப்ஸ் இதோ!!

0
nazriya

இன்றைய மாடர்ன் காலகட்டத்தில் அனைவருமே சரும அழகை பராமரிக்க பல அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனை இயற்கை முறையில் பயன்படுத்தும் போது சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் முழுமையான அழகையும் நமக்கு தருகின்றன.

சரும அழகிற்கு??

நம் சருமத்தில் பொதுவாக இருக்கும் பிரச்சனைகள் என்றால் அது கருவளையம், முகத்தில் தேவையற்ற முடி, உதட்டு கருமை, முகத்தில் பொலிவின்மை போன்றவையே. இதனை குறைக்க நாம் கெமிக்கல் பொருட்களையே நாடுகிறோம். இது குறிப்பிட்ட நேரத்திற்கு பயனளிக்கும் தவிர நிரந்தர தீர்வு ஆகாது. எனவே தான் இயற்கை பொருட்களை வைத்து நம் வீட்டிலேயே முக அழகை பராமரிக்க நாம் கிரீம் பயன்படுத்தலாம்.

facial tips
facial tips

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற பெண்கள் கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது அப்போதைக்கான தீர்வு மட்டுமே தவிர நிரந்தர தீர்வை தராது. இப்பொழுது கடலைமாவு மற்றும் மஞ்சளை கலந்து கொள்ளுங்கள். அதில் ரோஸ் வாட்டர், தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை தேவையற்ற முடி இருக்கும் இடத்தில் தடவவும். இவ்வாறு செய்து வந்தால் முடிகள் வளருவது குறையும்.

facial tips
facial tips

முகத்தில் உதடுகள் மட்டும் கருப்பாக இருந்தால் முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதற்கு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மேலும் காய்ச்சாத பால், வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து உதட்டில் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் உதட்டில் உள்ள இறந்த செல்கள் மறைந்து உதடுகள் சிவப்பாகும்.

facial tips
facial tips

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வாழைப்பழ தோலினை எடுத்து முகத்தில் மசாஜ் செய்யவும். அதன் பிறகு தக்காளி மற்றும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி அதனை சர்க்கரையில் தேய்த்து முகத்தில் இடவலமாக தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறைந்து முகத்திற்கு பொலிவை தரும்.

facial tips in tamil
facial tips in tamil

மேலும் பாலை ஐஸ் கட்டியாக்கி அதனை முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மேலும் சுத்தமான பாலில் ஐஸ் கட்டியை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உங்கள் முகத்தை 10 நொடிகள் வைத்து எடுக்கவும். இதே போல் ஒரு நாளைக்கு 5 முறை செய்யவும். இதனால் உதடு, முகம், தேவையற்ற முடிகள் போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here