#INDvsENG இரண்டாவது டெஸ்ட் – 11 வது முறையாக டக் அவுட் ஆன கோஹ்லி!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா அணியின் கேப்டன் கோஹ்லி டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இது இவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது தங்களது இரண்டாவது டெஸ்ட் போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது. முதல் போட்டியில் சொதப்பிய ரோஹித் சர்மா இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். ஆனால் அவரை தவிர மற்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் இன்றைய போட்டியில் சொதப்பி வருகின்றனர். துவக்க ஆட்டக்காரர் கில் 0 ஆட்டமிழந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பலத்த எதிர்பார்ப்பிற்கு நடுவே களம் வந்த இந்தியா அணியின் கேப்டன் விராட் கோஹ்லி 0 நிலையில் ஆட்டமிழந்து அனைவரையும் ஏமாற்றினார். இந்த போட்டியில் இவர் சிறப்பாக விளையாடுவர் எண்ணிய இவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இவர் இதுவரை சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 11 முறை டக் அவுட் ஆகியுள்ளார். மேலும் இதுவே முதல் முறையாக சுழற்பந்து வீச்சாளரிடம் டக் அவுட் ஆகி உள்ளார்.

#INDvsENG 2வது டெஸ்ட்டில் ரோஹித் சர்மா சதம் – வலுப்பெறும் இந்திய அணி!!

இந்த போட்டியில் மொயின் அலியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதுவரை வேகப்பந்து வீச்சாளர்களிடம் மட்டுமே கோஹ்லி டக் அவுட் ஆகியுள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளர்கள் ரவி ராம்பால், பென் ஹில்பென்ஹாஸ், லியாம் பிளங்கட், ஜேம்ஸ் ஆண்டர்சன், மிட்சல் ஸ்டார்க், சுரங்கா லக்மல், ஸ்டூவர்ட் பிராட், பாட் கம்மின்ஸ், கேமார் ரோச், அபே ஜாவேத் ஆகியோரிடம் டக் அவுட் ஆகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here