விழுப்புரத்தில் பள்ளி சிறுமி உயிருடன் எரித்துக் கொலை – அதிமுக கவுன்சிலர் கைது..!

0

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

முன்விரோதம்:

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை என்ற கிராமத்தில் சிறிய பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபால். 51 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஜெயபாலுக்கும் அப்பகுதியின் அதிமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் 2 நாட்களுக்கு முன்பு பெட்டிக்கடைக்கு வந்து ஜெயபாலின் மகனை முருகன் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்று இருந்தார் ஜெயபால்.

மாணவி உயிரிழப்பு:

இதனால் கடையை கவனித்து கொண்டிருந்த ஜெயபாலின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகளிடம் முருகனும் அவரது கூட்டாளி கலியபெருமாள் என்பவனும் தகராறு செய்துள்ளனர். பின்பு அந்த பெண்ணை ஜெயபாலின் வீட்டிற்கு இழுத்துச் சென்று வாயில் துணியை பொத்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு கதவைப் பூட்டி விட்டு தப்பிச் சென்று விட்டனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.

சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன் மற்றும் அவனது கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக மகனை கடுமையாக தாக்கி, மகளை உயிருடன் தீ வைத்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here