Monday, April 29, 2024

‘வெளிய வர மாட்டேன் போடா’ – தல அஜித்தை கலாய்த்த விகடன், கொதிப்பில் ரசிகர்கள்!!

Must Read

தமிழகத்தின் முன்னணி பத்திரிகையான விகடனில் தமிழ் திரையுலக நடிகர் “தல” அஜித்தை கேலி செய்யும் விதமாக ஒரு போட்டோவை வெளியிட்டது அவரது ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

ட்ரெண்ட் ஆன கேஷ்டேக்:

கடந்த சில நாட்களுக்கு முன் ஹிந்தி திணிப்புக்கு எதிராக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சில நடிகர்கள் “இந்தி தெரியாது போடா” ஹேஷ்டேக் டிஷர்ட் அணிந்தனர். அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தில் டீ-ஷர்ட்ல் இந்த வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். இந்தித்திணிப்புக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் இது வைரலானது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

கூடுதலாக பலரும் தங்களுக்கு ஏற்ற மாறி அந்த வாசகங்களை மாற்றி அமைத்து சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். “சமைக்க தெரியாது போடா” என்று பெண்களும், “பாத்திரம் கழுவ முடியாது போடி” என்று கணவன்மார்களும், “சாப்பாடு தான் முக்கியம் போடா” என்று உணவு பிரியர்கள் தங்களுக்கு ஏற்றது போல் இந்த ஹேஷ்டேக்கை மாற்றி அமைத்து வந்தனர். இதே போல் தமிழகத்தின் முன்னணி பத்திரிகையான “விகடன்” நடிகர் அஜித்தை மாற்றி கேலியாக சித்தரித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அஜித்தை கேலி செய்யும் புகைப்படம்:

அதில், நடிகர் அஜித் “வெளிய வரமாட்டேன் போடா” என்ற வாசகங்கள் அமைந்த டீ-ஷர்ட்யை அணிந்து இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் “தல” ரசிகர்கள் செம கடுப்பாகி உள்ளனர். ட்விட்டரில் விகடன் பத்திரிகைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

கொரோனா தொற்று இல்லை எனினும், நுரையீரலில் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்!!

Ajith_Kumar

அவர் அதிகமாக திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என்று குறிப்பிட்டு கூறி இது போல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். விகடன் அவ்வப்போது “தல” ரசிகர்களை சீண்டுவதும் அதற்கு அவர்கள் பதிலடி கொடுப்பதும் வழக்கமான ஒன்று தான்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -