அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கு சூப்பரான ‘Face Pack’ இதோ உங்களுக்காக!!

0
yoga for glowing face
yoga for glowing face

முகத்தை வசீகரமாக்க நாம் பல வழிமுறைகளை பின்பற்றி வருகிறோம். ஆனால் அதனால் எந்த பலனும் இல்லை என்று சலித்துக் கொள்பவர்களே அதிகம். இப்பொழுது உடனடியாக முகப் பொலிவை தரும் 10 Face Pack பற்றி இந்த பதிவில் காணலாம்.

முகப்பொலிவு அதிகரிக்க…

வெயில் காலங்களில் சருமம் வறட்சி அல்லது எண்ணெய் பிசுக்காக இருக்கும். இதற்கு நாம் மார்க்கெடில் விற்கும் பல கெமிக்கல் பொருட்களை வாங்கி மேலும் பல சரும பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம். இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிய முறையில் முகப்பொலிவை அதிகரிக்கலாம்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

face whitening
face whitening
  • ஒரு கை அளவிற்கு புதினாவை எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து அரைத்து முகம் கை, கால்களில் தடவி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவவும். இப்பொழுது உங்கள் சருமம் மிருதுவாக இருக்கும்.
  • வெள்ளரிக்காயை, சர்க்கரையுடன் அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அதனை முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் மறையும். முகத்தில் ரத்த ஓட்டம் சீராகும்.
face
  • தேன் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்தால் இறந்த செல்களால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
  • கடலை மாவு மற்றும் தயிரை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள துவாரங்கள் மறையும். அழுக்குகள் படிவதை தடுக்கும்.

உடல் எடையை எளிமையான முறையில் குறைக்கணுமா?? இதோ சூப்பர் டிப்ஸ்!!

  • முட்டையில் அதிக புரத சத்துக்கள் உள்ளன. இது உடலுக்கு மட்டுமல்ல, முடி மற்றும் முகத்திற்கு நல்ல பலனை தரும். முட்டையில் வெள்ளைக் கரு மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து கலந்து அதனை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் எண்ணெய் வடிவது குறையும். சருமம் மினுமினுப்பாகும்.
homemade remedy for smooth skin
homemade remedy for smooth skin
  • சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் இந்த இரண்டையும் கலந்து முகத்தில் தடவி வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நிரந்தரமாக நீங்கும்.
  • தக்காளியை மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ளவும். அந்த விழுதை தேனுடன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும்.
  • அடுத்து ஒரு பௌலில் பால், தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். இதனை தினமும் செய்யலாம். இதனால் முகப்பரு வருவது தடுக்கப்படும்.
face pack to get rid of suntan
face pack to get rid of suntan

காபி தூள், எலுமிச்சை சாறு, சர்க்கரை இவற்றை கலந்து முகத்தில் scrub செய்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்டிப்பாக இயற்கையாகவே முகத்தில் பொலிவை அதிகரிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here