கொரோனா தொற்று இல்லை எனினும், நுரையீரலில் பாதிப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்!!

0

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு பிறகு தொற்று இல்லை என உறுதியான பிறகும், சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். இதற்காக தயாரான 120 படுக்கைகள் கொண்டே கொரோனா சந்தேக வார்டை அவர் நேரில் ஆய்வு செய்தார்.

கொரோனா பரவல்:

தமிழகத்தில் இதுவரை 5,25,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் 8,618 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், 4,70,192 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 46,610 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வு செய்து வருகிறது. இன்று சென்னை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சந்தேக வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று 10% குறைந்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் 1.42 லட்சம் கொரோனா படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்த பின் ஏற்படும் உடல்நலக்குறைவு பரிசோதனை மையத்தில் தற்போது 3000 பேர் அனுமதிக்கப்பட்டு உளளதாக கூறினார்.

மத்திய அரசு துறைகளில் 90 சதவீத இடத்தை தமிழக பட்டதாரிகளுக்கு ஒதுக்குங்கள் – திருச்சி சிவா கோரிக்கை!!

மற்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறித்து ஐசிஎம்ஆர் இணையதளத்தில் தாமதமாக பதிவேற்றம் செய்யப்படுவதாலே, வேறுபாடு விகிதம் காணப்படுவதாக விளக்கம் அளித்தார். கொரோனா விதிமுறைகளை மக்கள் முறையாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்ட அமைச்சர், அபராதம் விதிப்பது அரசின் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here