நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘பிரண்டை காரக்குழம்பு’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
pirandai kaarkulambu 3

நாம் வாழ்ந்து வரும் காலகட்டத்தில் பல வகையான நோய்களை எதிர்கொள்கிறோம் அதில் மூட்டு வலி ஒன்று.  சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை மூட்டுவலியால் அவதிக்குள்ளாகிறார்கள். இதை தடுக்க நாம் உணவில் சத்துமிக்க பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும் அவற்றில் ஒன்று பிரண்டை. பிரண்டை காரக்குழம்பு எப்படி செய்வது என்பதை இப்போது இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

பிரண்டை – 100 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

பூண்டு – 50 கிராம்

தக்காளி – 50 கிராம்

கெட்டியான புளிக்கரைசல் – ஒரு கப்

மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – அரை டீஸ்பூன்

வெந்தயம் – 2 டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 50 மில்லி

செய்முறை

முதலில் தக்காளி, வெங்காயம், பிரண்டை மற்றும் பூண்டு போன்றவற்றை சிறிதளவாக நறுக்கி எடுத்து கொள்வோம். அடுப்பை பற்ற வைத்து வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றவும். அதில் எப்போதும் செய்வது போல் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், வெந்தயம் தாளித்து அத்துடன் நறுக்கிய பிரண்டை, நறுக்கிய வெங்காயம், தக்காளி, உரித்த பூண்டு சேர்த்து வதக்கவும்.

பிறகு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். அதன் பின் புளிக்கரைசல் ஊற்றி நன்கு கிளறி எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். இதுவே சுவையாக தான் இருக்கும். இன்னும் அதிக சுவை வேண்டும் என எதிர்பார்ப்பவர்களா இருந்தால் தேங்காய் எடுத்து துருவி சேர்த்து கொள்ளவும். தேவைப்பட்டால் கசகசா அரை டீஸ்பூன் சேர்த்து கொள்ளலாம். இப்பொழுது ருசியான பிரண்டை காரக்குழம்பு தயார்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here