‘போலீசார் என்னை பிரச்சாரம் செய்யாதீங்கனு கெஞ்சுனாங்க’ – உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!

0

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் திமுக கட்சியினர் ஈடுபட்டிருந்த போது, தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள் என காவல்துறையினர் கூறியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தகவல்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக திமுக கட்சி சார்பில் மூன்று கட்டமாக தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டது. திமுக கட்சியின் சார்பில் கட்சியின் தலைவர் ஸ்டாலின், கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேர்தல் பரப்புரையின் போது நடந்த சம்பவம் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் மேடையில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்கையில், ‘எனக்காக வரும் மக்கள் கூட்டத்தைப்பார்த்து பிரச்சாரம் செய்ய வேண்டாம் என காவல்துறையினர் என்னிடம் கெஞ்சினார்கள். தலைவர் என்னை பிரச்சாரம் செய்ய கூறியுள்ளார். அதனால் நான் பிரச்சாரம் செய்வேன். காவல்துறையினரின் கைதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன்.

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட மோகன்லால் – வைரலாகும் புகைப்படம்!!

நான் கலைஞர் பேரன். சொன்னதை செய்வேன் என கூறி பிரச்சாரம் செய்தேன். தினமும் என் மீது வழக்கு தொடரப்பட்டு, தினமும் கைது செய்யப்பட்டேன். ஒருகட்டத்தில், தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள். எங்களால் முடியவில்லை. விடிய விடிய பிரச்சாரம் செய்கிறீர்கள். எங்களால் உங்கள் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருக்க முடியாது என காவல்துறையினர் கெஞ்சினார்கள்’ என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here