‘மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இழிவுக்கு இனி முற்றுப்புள்ளி’ – உயர் நீதிமன்றம் அதிரடி!!

0

நாட்டில் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவு நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்றம்:

தற்போதைய விஞ்ஞான காலத்தில் கூட நமது நாட்டில் பாதாள சாக்கடைகள், கழிவு நீர் தோட்டிகள் ஆகியவற்றை மனிதர்கள் சுத்தம் செய்யும் நிலை தான் இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அவல நிலை தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இதனால் விஷவாயு தாக்கி பலர் தங்களது உயிர்களை இழந்து வருகின்றனர். தற்போது இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த வழக்கு இன்று நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமனையில் நடைபெற்றது. அப்போது இதுகுறித்து பேசிய நீதிபதி, உயிர் இழப்புகள் குறித்து தமிழக அரசு அறிக்கைகளை சமர்பித்தாலும், இதுபோன்ற அவல நிலையை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மனித கழிவுகளை மனிதர்கள் நீக்கும் கொடுமையான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட மோகன்லால் – வைரலாகும் புகைப்படம்!!

மனித கழிவுகளை நீக்குவதற்கு மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல். இந்த நிலையை நிறுத்தவும், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையும், இன்னும் மனிதர்களை இந்த செயலில் ஈடுபடுத்துவது தொடர்கிறதா என்பதையும் கவனித்து தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார் நீதிபதி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here