உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை).., பாகம் 3…,

0

 

                                                                          Story Writer

                                                                                   Sudha Rajendiran

 

கல்லூரி பயணம்  அழகாய் தொடர்ந்து கொண்டிருந்தது.., ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்காமல், தங்களது கல்லூரி  வாழ்க்கையை  சந்தோசமாக நகர்ந்தினர்…,

திவ்யா-வெற்றி இடையே  அழகான  நட்பு  மலர்ந்தது.., ஆனால் ராஜி-வெற்றி இடையே  அப்படி கிடையாது. ராஜிக்கு நட்பையும்  தாண்டி வெற்றி மேல்  ஒரு உணர்வு.., ராஜிக்கு  வெற்றி எப்பொழுதுமே  ஸ்பெஷல் தான்.., அவள் வளர்ந்த  சூழ்நிலைக்கும்  வெற்றியின்  நடவடிக்கைக்கும் ரொம்பவே வித்தியாசம்.

அதனால் தான்  ராஜிக்கு  ஏனோ வெற்றியை  பிடித்து  போனது.

அப்படி என்ன  ராஜி  வளர்ந்த சூழ்நிலை..,

ராஜி  என்ன தான்  துருதுருவவென இருந்தாலும் ஒரு அப்பாவி.., அவரின் குடும்பமும்  அப்படி தான்.., ‘இருக்க இடம்  தெரியாம  இருந்துட்டு போயிடுவோம்’ இந்த டயலாக்கிற்கு பெயர்  போனவர்கள்.

சிறு வயதில் இருந்தே பல கட்டுப்பாடுகளை மட்டுமே பார்த்து வளந்தவள். அதனாலேயே ராஜிக்கு அதை தாண்டி வாழ  வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசை  நிறைவேற நாட்கள் தூரமில்லை என்பதை பேதையவள் உணரவில்லை.

எந்த வம்பு தும்பும்  வேண்டாம்  என்று இருக்கும்  ஆண்களை  பார்த்து பழகியவளுக்கு  வெற்றியின் தைரியமும், எதையுமே  அலட்டி கொள்ளாத அவனது சுபாவமும்  வெகுவாக  ராஜிக்கு  ஈர்த்தது. ராஜிக்கு குறிப்பிட்ட  circle இருக்கும். அவர்களிடம் மட்டுமே பேசி சிரித்து கலகலப்பாக இருப்பாள். அதை தாண்டி அவளால்  வெளியே வர முடியவில்லை.

ராஜிக்கு திறமைகள்  அதிகம் இருந்தாலும் அவரது குடும்பம்  அதனை வெளி கொண்டு வர  விடவில்லை. அதற்கெல்லாம்  முற்றுப்புள்ளி  வைக்கும்  நாளும் நெருங்கி கொண்டு தான் உள்ளது.

கல்லூரி  ஆரம்பித்து 6 மாதங்கள்  ஆகி விட  செமஸ்டருக்கு  அனைவரும் ரெடியாகினர்.., நம்ம  வெற்றி தான் படிப்பாளி  ஆச்சே..,

வெற்றியும்  ராஜியும்  பக்கத்து பக்கத்து  register number வேறு.., இது ராஜிக்கு  சாதகமாக அமைந்தது.

நமக்கு தான் வெற்றி இருக்கானே.., வெற்றி இருக்க பயமேன் என்று சுற்றி திரிந்தாள்..,          

exam hall-க்கு  இருவருமே  நுழைய டேய்  வெற்றி எப்படியாச்சும் என்ன பாஸ் பண்ணி விட்றுடா..,

ஆஹா.., உனக்கு சொல்லி கொடுத்தா என்ன பண்ணுவ.., என்ன தருவ..,

நம்ம  அப்படியா பழகி இருக்கோம் வெற்றி..,  பாவம்ல நானு..,

ராஜி தருவியா??  மாட்டியா??

சரி தரேன்.., என்ன வேணும் சொல்லு..,

ம்ம்ம் நீ தான் வேணும்..,

இல்ல புரியல..,
 
ஐயோ  mind வாய்ஸ்னு  சத்தமா  பேசிட்டேனே.., சமாளிப்போம்..,

நான் ஏதும் சொல்லலையே…,

இல்ல  எதோ நீ தான்னு  கேட்டுச்சு..,

அதுவா?? நீ தான் ஏதாச்சும் வாங்கி தரணும்னு சொன்னேன்..,

சரி சரி வாங்கி தரேன்..,

வெற்றியின்  உதவியால் exam-ஐ  முடித்து விட்டாள் ராஜி..,

வெளியே திவ்யா வெயிட்டிங்கில் இருக்க..,

ராஜி அங்கு வர..,

அடியே திவ்யா exam எப்படி எழுதி இருக்க pass ஆகிடுவியா??

வெற்றி உடையான் படைக்கு அஞ்சான்.., என ராஜி பெருமிதமாக சொல்ல..,

ஆஹான்.., அப்போ பாஸ் ஆகிடுவ போலையே..,

வெற்றியும் அங்கே வர மூவரும் அரட்டையுடன் அங்கிருந்து நகர்கின்றனர்.

திவ்யா Library போக வேண்டும் என்று சொல்லி விட்டு நகர, வெற்றியும் ராஜியும் மட்டும் செல்கின்றனர்.

இது exam நடந்து கொண்டிருக்கும் நேரம் என்பதால் கல்லூரியில் அந்த அளவிற்கு ஆள் நடமாட்டம் இல்லை.

வெற்றியும் ராஜியும் நடந்து செல்ல அப்பொழுது, எதோ தடுமாற சட்டென்று வெற்றியின் கையை பிடிக்க திவ்யாவிற்கு என்னவோ போல் ஆகிறது..,

வெற்றிக்கு அங்கு ஒன்றுமே புரியவில்லை..,

என்னாச்சு என்று கேட்க கூட குரல் அவனுக்கு கைகொடுக்கவில்லை…,

பார்வை மட்டுமே கொஞ்ச நேரம் பேச.., தயக்கத்துடன் கையை பிரித்தாள் பேதையவள்..,

இருவருக்கும் இடையே சிறிய மௌனம் மட்டுமே நிகழ்ந்தது…,

ஏண்டி அவன் என்ன நெனச்சுட்டு இருக்கானே தெரியலையே.., இப்படி பண்ணிட்டியே.., ராஜி மைண்ட் வாய்ஸில் புலம்பி கொண்டிருக்க..,

வெற்றியின் நிலைமை அதுக்கும் மேல..,

இந்த நிமிஷம் இப்படியே நீளாதா?? என தவித்து கொண்டிருந்தான்..,

நீ எனக்கு வேணும் ராஜி என்று மருகி கொண்டிருந்தான்..,

ராஜிக்கும் வெற்றி மீது காதல் இருக்க தான் செய்கிறது.., ஆனால் இல்லை என்று சொல்லி விடுவானோ?? சொல்லி விட்டால்.., பயத்திலேயே எதையும் வெளிக்காட்டாமல் இருந்து விட்டாள்..,

ராஜிக்கு அவசரமாக கால் வர.., எடுத்து பேசினாள்..,

கால்-ஐ வைத்து விட்டு.., ஈவினிங் கோவிலுக்கு போக இப்போ கிளம்புனா தான் சரியா வரும்.., நான் கிளம்புறேன் வெற்றி..,

வெற்றி தலையை மட்டும் ஆட்டி வைத்தான்..,

ராஜி  கொஞ்சம் தூரம் தான் நடந்திருப்பாள்..,

திடீரென எண்ணம் தோன்றியவனாய்..,

ராஜி எந்த கோவில்..,

பக்கத்துல இருக்க முருகன் கோவில் தான்..,

லைட்டாக சிரித்து விட்டு.., பாப்போம் ராஜி..,

ராஜிக்கும் எதுவும் விளங்கவில்லை..,

என்னாச்சு வெற்றி..,

இல்ல.., நாளைக்கு பாப்போம்னு சொன்னே..,

ராஜிக்கு அவனது சிரிப்பு சில்லென ஒரு உணர்வை தூண்ட திரும்பி பார்த்தபடியே சென்று விட்டாள்..,

ராஜி கோவிலுக்கு கிளம்பி கொண்டிருக்கிறாள்..,

வெற்றியும் அடிச்சு புடுச்சு கோவிலுக்கு செல்ல தயாராகிறான்…

இந்த கோவில் தான் இருவரின் வாழ்க்கையே மாற்றியமைக்க போகிறது என்பதை இருவருமே உணர்ந்திருக்க வில்லை..,

கல்லூரி பயணம் தொடரும்..,

 

உன்னுள் உறைகிறேன்( கல்லூரியின் கதை) Part – 2..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here